Thursday, 8 March 2012

சிந்தர்

1 . கறுப்பு ஆட்சிக்கு வரும்
     இன்று அந்தியிலும்
     நாளை ஆப்பிரிக்காவிலும் .

2 .கண்ணில்லாதவர்கள்
    கையேந்துகிறபோது
    நாமெல்லாம் குருடர்கள் .

3 நான்கு கால்களும்
   பல கைகளுமாய்
   அரசாங்க மேசைகள் .

4 .பட்டாம் பூச்சி பிடித்துக் கொடுத்தேன்
    இறக்கை முளைத்தது
    மகளுக்கு .

5 .துடைக்கத்   துடைக்க
    உன் நினைவுகள்
    ஒட்டடையாய் .

6.விழிகளில் ஊதி தூசி எடுத்தாய்
   தூசி வெளியேற
   உள்ளே நீ


              

No comments:

Post a Comment