Tuesday, 13 March 2012

அகத்தின் புறம்

உன்
அடையாளங்கள்
கேட்டார்கள்

என்ன சொல்ல?

சுருட்டை முடியையா...
சுயநலத்தையா

உயரமாய் வளர்ந்ததையா
உடனிருந்து கெடுத்ததையா

செந்நிறம் என்பதையா..
செய்நன்றி மறந்ததையா

வசீகர சிரிப்பையா
வக்கிர புத்தியையா

எதைச் சொல்ல...?

அகத்தின் அசிங்கம்
முகத்தில் தெரியுமா...?

No comments:

Post a Comment