மிருகங்களோடு
பழகினான்
மனிதன்.
மிருகங்களிடத்தில்
மனிதநேயமும்
மனிதர்களிடத்தில்
மிருகத்தனங்களும்.
இயந்திரங்களோடு
பழகினான்
மனிதன்.
இயந்திரங்களிடத்தில்
மனித ஆற்றலும்
மனிதர்களிடத்தில்
இயந்திரத்தனங்களும்.
இயற்கையோடு
பழகினான்
மனிதன்.
இயற்கையிடத்தில
மனித குணங்களும்
மனிதர்களிடத்தில்
செயற்கைத்தனங்களும்.
மனிதன்
பழகவேயில்லை
இன்னொரு மனிதனிடம்.
அருமை கவிஞரே.நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்று .பாராட்டுக்கள் .
ReplyDelete