கொலுசுச் சத்தத்தில்
முதுகுப் பக்கத்தில்
உள்ளங்கை ஈரத்தில்
உதடுகளின் ஓரத்தில்
கன்னத்து மச்சத்தில்
கருவிழியின் ஆழத்தில்
எங்கேனும்
கிடைத்தேனா நான் .
2
பூப்பதற்கு
தயாராகி விட்டது
என் தோட்டம்.
இயற்பெயர்
இருக்கட்டும் .
பூக்களுக்கெல்லாம்
நீ வந்து
ஒரு புனைப் பெயர்
சூட்டிவிட்டுப் போ...
3
நீ
ஊரிலில்லாத நாளன்று
பெய்துகொண்டிருந்த மழையை
நீயென நினைத்தே
நனைந்தேன்.
நனைந்ததால் நனைந்தோம் கவிதை மழையில்.மேலும் நனைய வேண்டுகிறோம்மழையில் நனையவே.
ReplyDelete