Thursday, 26 December 2013

நிறங்கள்

நேற்றென் கனவுகள் 
கறுப்பு வெள்ளையில்
இருந்தன.

வானத்தில் 
நீலமில்லை.

மரங்களில்
பச்சையில்லை.

கடல் வெள்ளையாய்
பால் கறுப்பாய்
இருந்தன.

ரத்தத்தில் 
அதன் நிறமில்லை.

வானவில்லில்
ஏழு கோடுகள் மட்டுமே
இருந்தன.

கனவுகளிலும்
களவாடப்பட்டிருந்தன
வண்ணங்கள்.

நிறமற்றிருக்கிறது
வாழ்க்கை.



1 comment:

  1. மனமற்ற வாழ்வில் நிறங்களுக்கு நிறமில்லையோ

    ReplyDelete